இரண்டாம் ஏதெனியன் கூட்டணி என்பது ஏஜியன் நகர அரசுகளின் கடல்சார் கூட்டமைப்பு ஆகும். இது கிமு 378 முதல் 355 வரை ஏதென்சின் தலைமையில் செயல்பட்டது. இதன் முதன்மை நோக்கம் எசுபார்த்தா எதிர்ப்பு அடுத்து பாரசீகப் பேரரசின் வளர்ச்சிக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை ஆகும்...மேலும்
1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
பிரபல தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் தேவா தனது 75-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.
2026 அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அமைதி, மற்றும் பன்னாட்டுச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஓர் அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம். 1930-களில் இது உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ், நிலவழகன் என்ற பெயரில் தமிழ் விக்கிப்பீடியாவில் 2024 முதல் பங்களித்து வருகிறார். தற்போது பணிப் பயிற்சி நிமித்தமாக குருகிராமில் வசித்து வருகிறார். தமிழ் மொழியின் மீதும் கலைக்களஞ்சியப் பகிர்வின் மீதும் கொண்ட ஆர்வத்தால் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். முதன்மையாகக் கட்டுரைகளை உருவாக்குதல், பிறமொழி விக்கியிலிருந்து பயனுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தல், கலைக்களஞ்சியக் கொள்கைகளுக்கு முரணான தொகுப்புகளைக் களைவதிலும், விக்கிப்பீடியத் துப்புரவுப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேற்கு வங்காளத்தின் அரசியல் குடும்பங்கள் என்ற முதற் கட்டுரையைத் தொடங்கி இருநூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். சூரிய மண்டல இயந்திரத்தை விளக்கும் மெய்யியலாளர், மடெலிகா கோளம், தாதி ஜானகி (ஆன்மிகத் தலைவர்), ஆண்விழையான் முதலியவை இவர் விரும்பித் தொடங்கிய கட்டுரைகளாகும். விக்கிப்பீடியாவின் கூட்டு உழைப்பில் தொடர்ந்து கற்றுக்கொண்டு, தரமான உள்ளடக்கங்களை உருவாக்க முயன்று வருவதாகக் கூறுகிறார்.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,91,836 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.