உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.

1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு.

2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது.

3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு.

4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு.

ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தொகு  

சிறப்புக் கட்டுரை

நவூரு தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடும், உலகின் மிகச்சிறிய குடியரசு நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபாடானது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளன. அரசாங்கமோ அல்லது அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் சொந்தக்காரருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.


தொகு  

சிறப்புப் படம்

மாலே
மாலே
படிம உதவி: Shahee Ilyas

மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.

தொகு  

செய்திகளில் புவியியல்

தொகு  

புவியியலாளர்கள்‎

எவரஸ்ட்
ஜார்ஜ் எவரஸ்ட் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

  • ... மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • ... தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால் நர்மதை, தபதி, மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
  • ... நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும்.
தொகு  

இதே மாதத்தில்

தொகு  

புவியியல் கண்டங்கள்

அன்டார்க்டிக்கா
ஆப்பிரிக்க-யூரேசியா
அமெரிக்காக்கள்
ஆத்திரேலியா (கண்டம்)
ஆப்பிரிக்கா
யூரேசியா
வட அமெரிக்கா
ஓசியானியா
ஐரோப்பா
ஆசியா
தென் அமெரிக்கா
அமாசியா
கோண்டுவானா • இலெமூரியா • பாஞ்சியா
தொகு  

பகுப்புகள்

புவியியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • புவியியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|புவியியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • புவியியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • புவியியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • புவியியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் புவியியல்
விக்கித்திட்டம்
துணைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்


தொகு  

தொடர்பான தலைப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
அறிவியல்அறிவியல்
அறிவியல்
இந்தியாஇந்தியா
இந்தியா
உயிரியல்உயிரியல்
உயிரியல்
சூழலியல்சூழலியல்
சூழலியல்
தமிழ்நாடு அறிவியல் இந்தியா உயிரியல் சூழலியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:புவியியல்&oldid=3616194" இலிருந்து மீள்விக்கப்பட்டது