தானியங்கி எழுதுகோல்


தானியங்கி எழுதுகோல் (automatic pen or autopen) என்பதை வழக்கத்தில் கையொப்பமிடும் இயந்திரம் என அழைக்கப்படுகிறது. தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திர சாதனமாகும்.
பிரபலமான நபர்கள் ஒரு நாளைக்கு பலமுறை தங்கள் கையொப்பங்களை இடுவதற்கு வேண்டியிருக்கலாம்; உதாரணமாக பிரபலங்கள் நினைவொப்பம் எனும் தற்கையெழுத்து[1] கோரிக்கைகளைப் பெறுவது அல்லது அரசியல்வாதிகள் தங்கள் உத்தியோகபூர்வ தகுதிகளில் ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் கையொப்பமிடுவது போன்றவை. இதன் விளைவாக பல பொதுப் பிரமுகர்கள் தங்கள் கையொப்பம் தேவைக்கேற்பவும், தங்கள் நேரடி ஈடுபாடு இல்லாமலும் அச்சிடப்பட அனுமதிக்க தானியங்கி எழுதுகோலைப் பயன்படுத்துகின்றனர்.[2]
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தானியங்கி எழுதுகோல்கள், ஒரு கையொப்பத்துடன் நிரல்படுத்தப்பட்ட இயந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அந்த கையொப்ப இயந்திரம் பின்னர் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரக் கையால் உருவாக்கப்பட்டது.[3]
தானியங்கி எழுதுகோலால் இடப்பட்ட கையொப்பத்திற்கும், உண்மையான கையால் இடப்பட்ட கையொப்பத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, ஒரு தானியங்கி எழுதுகோலின் பயன்பாடு, ஒரு பிரபலமான ஆட்டோகிராஃப் உண்மையானதா அல்லது நகலெடுக்கப்பட்டதா என்பது குறித்து நம்பத்தகுந்த மறுப்பைத் தெரிவிக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் பெறுநரால் கையொப்பத்தின் தனிப்பட்ட மதிப்பு பற்றிய உணர்வை அதிகரிக்கிறது. இருப்பினும், அறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் தானியங்கி எழுதுகோல் கையொப்பங்கள், கையெழுத்து சேகரிப்புப் பொருட்களாக மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளன; தானியங்கி எழுதுகோலைப் பயன்படுத்துபவர் என்று அறியப்பட்ட நபர்களிடமிருந்து வரும் சட்டப்பூர்வமான கையால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் பொதுவாக செல்லுபடியாகும் என்று கருதப்படுவதற்கு சரிபார்ப்பு மற்றும் மூல ஆதாரத்தைக் கோருகின்றன. 2005ஆம் ஆண்டில், அமெரிக்க நீதித்துறை, அமெரிக்க அதிபரால் தானியங்கி எழுதுகோலைப் பயன்படுத்தப்படுவது குறித்த ஒரு விசாரணைக்கு பதிலளித்தது, அதன் பயன்பாடு அரசியலமைப்பின் தொகுதி 1 மற்றும் பிரிவு 7ல் காணப்படும் உரைக்கு இணங்க உள்ளது என்று கண்டறிந்தது.[4]
ஆரம்பகால தானியங்கி எழுதுகோல்கள் பிளாஸ்டிக் மேட்ரிக்ஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்கரத்தின் வடிவத்தில் செதுக்கப்பட்ட தட்டில் வெட்டப்பட்ட ஒரு பகுதியாகும். ஒரு மின்சார மோட்டாரால் இயக்கப்படும் ஒரு ஸ்டைலஸ், தட்டில் செதுக்கப்பட்ட ஒரு சுயவிவரம் அல்லது வடிவத்தின் x- மற்றும் y-அச்சுகளைப் பின்தொடர்ந்தது. அந்த ஸ்டைலஸ் ஒரு கையுடன் இயந்திரத்தனமாக இணைக்கப்பட்டுள்ளது, அது கிட்டத்தட்ட எந்தவொரு பொதுவான எழுதும் கருவியையும் வைத்திருக்க முடியும். இதனால் ஒருவரின் எழுதுகோல் மற்றும் மையை நம்பகத்தன்மையை உணர்த்தப் பயன்படுத்தலாம். தானியங்கி எழுதுகோல் கையொப்பம் காகிதத்தில் சீரான அழுத்தம் மற்றும் பதிப்புடன் செய்யப்படுகிறது, இதன் மூலம் இந்த இயந்திரங்களை அழுத்தம் மாறுபடும் அசல் கையெழுத்திலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.[5]
வரலாறு
[தொகு]முதல் தானியங்கி எழுதுகோல் எனும் கையொப்பம் நகலெடுக்கும் இயந்திரங்கள் பிரிட்டிஷ் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் ஐசக் ஹாக்கின்சால் 1803ல் உருவாக்கப்பட்டது. ரோபோ எழுதுகோல் எனப்படும் தானியங்கி எழுதுகோல் 1930களில் உருவாக்கப்பட்டது. இது கையொப்பமிடுபவரின் கையொப்பத்தைப் பதிவு செய்வதற்காக 1937ல் வணிக ரீதியாகக் கிடைக்கத் தொடங்கியது. முதல் வணிக ரீதியாக வெற்றிகரமான தானியங்கி எழுதுகோல்கள் 1942ல் இராபர்ட் எம். டி சாசோ இளையவரால் உருவாக்கப்பட்டது.
பயன்பாடு
[தொகு]தானியங்கி எழுதுகோல்களைப் பயன்படுத்தும் நபர்கள் இதை பெரும்பாலும் பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கையொப்பங்கள், கையால் இடப்பட்ட கையொப்பங்களை விடக் குறைவாகவே மதிக்கப்படுகிறது. மேலும் அவற்றைப் பெறுபவர்களால் ஓரளவிற்கு நம்பகத்தன்மையற்றவையாகக் கருதப்படுகிறது.[6] 2004-ல் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்டின் அலுவலகம், போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் கடிதங்களில் கையெழுத்திட ஆட்டோபென்னைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர் விமர்சனத்திற்கு உள்ளானார்.[7]
அரசியலுக்கு வெளியே, நவம்பர் 2022-இல், பாடகர்-பாடலாசிரியர் பாப் டிலனால் எழுதப்பட்டு, அந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தி ஃபிலாசஃபி ஆஃப் மாடர்ன் சாங் என்ற நூலின் சில பிரதிகள் தானியங்கி எழுதுகோல் மூலம் கையெழுத்திடப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்பட்டது. இது விமர்சனத்திற்கு வழிவகுத்தது. கையொப்பமிடப்பட்ட பதிப்புகள் "கையால் கையொப்பமிடப்பட்டவை" என்று சந்தைப்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் $600 அமெரிக்க டாலர் விலையில் விற்கப்பட்டன. டிலன் மற்றும் புத்தகத்தின் வெளியீட்டாளரான சைமன் & ஷஸ்டர் இருவரும் மன்னிப்புக் கோரினர்; ஆட்டோபென் மூலம் கையொப்பமிடப்பட்ட பதிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெறும் சலுகையும் வழங்கப்பட்டது.[8]
நவம்பர் 2025ல் தானியங்கி எழுதுகோலைப் பயன்படுத்தி கையொப்பமிட்ட முன்னாள் அதிபர் ஜோ பைடன் வெளிட்ட ஆணைகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ autograph
- ↑ Seabrook, Andrea (May 27, 2011). "Obama Wields His ... Autopen?". NPR.
- ↑ Rein, Lisa (April 11, 2014). "Washington's Signature-Writing Machines Rumble Into The Digital Age". The Washington Post: p. A1. https://www.washingtonpost.com/politics/washingtons-signature-writing-machines-rumble-into-the-digital-age/2014/04/11/3bb38bc0-afad-11e3-a49e-76adc9210f19_story.html.
- ↑ "Whether the President May Sign a Bill by Directing That His Signature Be Affixed to It". Department of Justice.
- ↑ "The Autopen". The Autopen Company. Archived from the original on October 5, 2013.
- ↑ McClain, Buzz (July 2013). "Sincerely Yours, This Machine Does Not Exist". Northern Virginia Magazine. http://www.northernvirginiamag.com/entertainment/entertainment-features/2013/07/29/sincerely-yours-this-machine-does-not-exist/. பார்த்த நாள்: April 21, 2014.
- ↑ Glaister, Dan (December 20, 2004). "Signature row turns up heat on Rumsfeld". The Guardian. https://www.theguardian.com/world/2004/dec/20/iraq.usa.
- ↑ Willman, Chris (November 20, 2022). "Bob Dylan Fans Who Bought $600 'Hand-Signed' Books With Replica Autographs Will Receive Refunds From Publisher". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on November 22, 2022. Retrieved November 23, 2022.
- ↑ ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள்: ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்