உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்ட் டீம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் டீம்ஸ்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடுமார்ச்சு 14, 2017; 9 ஆண்டுகள் முன்னர் (2017-03-14)
மொழிTypeScript, Angular, React
1.0: எலக்ட்ரான், Microsoft Edge WebView2
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு, மேக் ஓஎஸ், ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம், உலகளாவிய வலை
கிடைக்கும் மொழிஆங்கிலம், அரபு, வங்கமொழி, பல்கேரியன், கட்டலான், குரோசியா, செக், டேனிஷ், இடச்சு, எசுதோனியன், பிலிப்பீன்சு, ஃபின்னிஷ், பிரஞ்சு, செருமன், கிரேக்கம், குசராத்தி, ஹீப்ரு, இந்தி, அங்கேரி, ஐஸ்லாண்டிக், இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், கன்னடம், கொரியா, லாட்வியன், லிதுவேனியன், மலையாளம், மராத்தி, நார்வேஜியன், போர்ச்சுகீசு, நார்வே, போக்மியன் உருசியா, செர்பியன், எளிமைப்படுத்தப்பட்ட சீனம், சுலோவாக், சுலோவேனியன், இசுபானிய மொழி, சுவீடன், தமிழ், தெலுங்கு, தாய்லாந்து, பாரம்பரிய சீனா, துருக்கி, உக்ரைன், வியட்நாம்.
மென்பொருள் வகைமைசேர்ந்தியங்கல் மென்பொருள்
உரிமம்தனியுடைமை மென்பொருள் வணிகமென்பொருள், மேகக் கணிமை மென்பொருள்
இணையத்தளம்teams.microsoft.com

மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய ஒரு காணொளிக் கருத்தரங்கு, இணையவழி உரையாடல், மற்றும் கூட்டுழைப்பு அலுவலக மென்பொருளாகும். இது பெரும்பாலும் நிறுவனங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் குழுவாக வேலை செய்யும் இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரே இடத்தில் உரையாடல், காணொலி அழைப்பு, கோப்புகளை பகிர்ந்துகொள்வது, பணிகளை திட்டமிடுவது போன்றவற்றை செய்யலாம்[1].

அம்சங்கள்

[தொகு]
  • உரையாடல்: ஒருவர் மற்றொருவருடன் தனிப்பட்ட முறையிலும் அல்லது குழுவாகவும் உரையாடலாம். செய்தி, படங்கள், குறியீட்டுச் சின்னங்கள் அனுப்பலாம்.
  • காணொலி மற்றும் குரல் அழைப்புகள்: குழுவினருடன் காணொலி மற்றும் குரல் மூலம் நேரடியாக பேசலாம். தேவையானபோது திரையைக் காட்டி விளக்கலாம்.
  • கோப்புகளை பகிர்தல்: ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் போன்ற கோப்புகளை எளிதாக பகிரலாம். பகிரப்பட்ட கோப்புகளை எல்லோரும் ஒரே நேரத்தில் திறந்து திருத்தலாம்.
  • அணிகள் மற்றும் பிரிவுகள்: ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி அணி உருவாக்கலாம். ஒவ்வொரு அணிக்குள்ளும் பல பிரிவுகளை உருவாக்கி தலைப்புக்கு ஏற்ப உரையாடலாம்.
  • ஒன்றிணைந்து வேலை செய்வது: மைக்ரோசாஃப்ட் வார்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட் போன்ற ஆவணங்களை ஒரே நேரத்தில் பலர் இணைந்து திருத்தலாம். கூட்டத்தின் போது குறிப்புகளை எழுதிக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Warren, Tom (2 November 2016). "Microsoft Teams launches to take on Slack in the workplace". The Verge இம் மூலத்தில் இருந்து February 20, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220204255/https://www.theverge.com/2016/11/2/13497992/microsoft-teams-slack-competitor-features.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_டீம்ஸ்&oldid=4454411" இலிருந்து மீள்விக்கப்பட்டது