உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டியன்
பாண்டியன்
பாண்டியன்
பிறப்பு(1960-07-12)12 சூலை 1960
செட்டிக்குறிச்சி,அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு10 சனவரி 2008(2008-01-10) (அகவை 49)
மதுரை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1983-2008
வாழ்க்கைத்
துணை
இலதா
பிள்ளைகள்இரகு

பாண்டியன் (Pandiyan; 12 சூலை 1960 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1]

மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், முதல் வசந்தம், மண்ணுக்கேத்த பொண்ணு போன்றவை இவருக்கு பெயர் பெற்று தந்தன.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பாண்டியன் விருதுநகர் மாவட்டம் செட்டிக்குறிச்சியில் சோலைராஜ், சரஸ்வதி இணையருக்குப் மகனாக பிறந்தார்.[2] இவரின் இயற்பெயர் பாண்டிகண்ணன் ஆகும். இலதாவை மணந்த இவருக்கு சோலை ராகவேந்திரன் எனும் இரகு என்கிற மகனும் உள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
1983மண்வாசனைவீரண்ணாஅறிமுகம்
மனைவி சொல்லே மந்திரம்பரதன்
1984குவா குவா வாத்துகள்பாண்டியன்
நான் பாடும் பாடல்செல்வம்
வேங்கையின் மைந்தன்வேங்கை
வாழ்க்கைகண்ணன்
புதுமைப்பெண்இராமச்சந்திரன்
சிறைமுத்து
மண்சோறு
சுக்ரதிசை கண்ணன்
என் உயிர் நண்பாஆனந்த்
நேரம் நல்ல நேரம்
தலையணை மந்திரம்இராஜா
பொண்ணு பிடிச்சிருக்கு
நிச்சியம்
1985மண்ணுக்கேத்த பொண்ணுமருதன்
நவக்கிரக நாயகிமாயாண்டி / மகேந்திர பூபதி
மருதாணிமாணிக்கம்
பட்டுச்சேலைஅழகு
ராஜ கோபுரம்ரங்கா
ஆண்பாவம்பெரிய பாண்டி
1986கரிமேடு கருவாயன்
கடைக்கண் பார்வைபாபு
ஜோதி மலர்பாண்டியன்
முதல் வசந்தம்பொன்னுசாமி
தாய்க்கு ஒரு தாலாட்டுஇரமேஷ்
கோவில் யானைஇராஜா
மண்ணுக்குள் வைரம்பூமி
1987திருமதி ஒரு வெகுமதிகிரிஷ்ணன்
தாயே நீயே துணைபாண்டியன்
ஒரே ரத்தம்பொன்னான்
கூலிக்காரன்கைதிவிருந்தினர் தோற்றம்
இனி ஒரு சுதந்திரம்பாண்டியன்
ஆண்களை நம்பாதேமுத்துப்பாண்டி
ஊர்க்காவலன்பாண்டியன்
பரிசம் போட்டாச்சுஇராமு
ஆயுசு நூறுசுப்பிரமணி
அருள் தரும் ஐயப்பன்சங்குசாமி
1988காலையும் நீயே மாலையும் நீயேசெல்வாவிருந்தினர் தோற்றம்
வீடு மனைவி மக்கள்அடியாள்
குரு சிஷ்யன்மனோகரன்
இரயிலுக்கு நேரமாச்சுஅலுவலர்
பூந்தோட்ட காவல்காரன்முத்து பாட்சா
தங்கக்கலசம்அருண்
மேளம் கொட்டு தாலி கட்டுமச்சக்காளை
தென்பாண்டிச் சீமையிலேவேலு
1989காதல் என்னும் நதியினிலேரங்கநாதன்
கருங்குயில் குன்றம்
சோலை குயில்காளி
சகலகலா சம்மந்திவசந்தன்
சங்கு புஷ்பங்கள்மருத்துவர்
வலது காலை வைத்து வாஇரமேஷ்
1990பெண்கள் வீட்டின் கண்கள்ஜீவா
பந்தயக் குதிரைகள்
சாத்தான் சொல்லைத் தட்டாதேமூர்த்தி
1991கும்பக்கரை தங்கய்யாகங்கைய்யா
எம். ஜி. ஆர். நகரில்சிவா
அன்புள்ள தங்கச்சிக்குசின்னதுரை
தாயம்மாபாண்டியன்
1992நாடோடித் தென்றல்பூங்குருவி உறவினர்
1993கிழக்குச் சீமையிலேசின்ன கருப்பு
பாரம்பரியம்சேகர்
பெற்றெடுத்த பிள்ளைகுமரனின் தந்தை
1994மைந்தன்ஆய்வாளர் விஜய்
பெரிய மருதுபாண்டியன்
அத்த மக ரத்தினமேமைனர் இராஜபாண்டி
வா மகளே வாகல்யாணியின் கணவர்விருந்தினர் தோற்றம்
1995படிக்கிற வயசுல
1996திரும்பிப் பார்அசோக்
புருஷன் பொண்டாட்டிநடராஜன்
1997பெரிய இடத்து மாப்பிள்ளைபாண்டியன்
1998உதவிக்கு வரலாமாபால்ராசு
உன்னுடன்இரசீது ஆய்வாளர்விருந்தினர் தோற்றம்
2001சிட்டிசன்வாப்பா
2003அன்பே உன்வசம்புலனாய்வாளர்விருந்தினர் தோற்றம்
2006கை வந்த கலைகௌசல்யாவின் தந்தை
2008புதுசு கண்ணா புதுசுஇராக்கி

தொலைக்காட்சித் தொடர்

[தொகு]
ஆண்டு தொடர் கதாபாத்திரம் குறிப்புகள்
1999பிளாஸ்டிக் விழுதுகள்
2001-2002கேளுங்க மாமியாரே நீங்களும் மருமகள் தான்ஆர்.கே

இறப்பு

[தொகு]

நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் 2008 சனவரி 10 அன்று மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48-ஆவது வயதில் காலமானார். இவருக்கு இலதா என்ற மனைவியும், இரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Kumar, S. R. Ashok (16 July 2011). "A new effort". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2231514.ece.
  2. ↑ Cineulagam (2025-02-19). Actor Pandiyan Son Interview – via YouTube.{{cite AV media}}: CS1 maint: url-status (link)
  3. ↑ https://timesofindia.indiatimes.com/india/Tamil-actor-Pandian-dead/articleshow/2690377.cms

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_(நடிகர்)&oldid=4526665" இலிருந்து மீள்விக்கப்பட்டது