உள்ளடக்கத்துக்குச் செல்

டோவர் லேன் இசை மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோவர் லேன் இசை மாநாடு
[[File:|150px]]
டோவர் லேன் இசை மாநாட்டில் நிகழ்ச்சி
வகைசெவ்வியல்
நாள்சனவரி 22 முதல் 25/26 வரை
அமைவிடம்(கள்)நசுருல் மஞ்சா, கொல்கத்தா, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1952 -தற்போது
வலைத்தளம்
doverlanemusicconference.org

டோவர் லேன் இசை மாநாடு (Dover Lane Music Conference) என்பது தெற்கு கொல்கத்தாவில் உள்ள 2,400 இருக்கைகள் கொண்ட உள்ளரங்கமான நசுருல் மஞ்சாவில் சனவரி மாதத்தில் நடைபெறும் ஒரு வருடாந்திர இந்திய பாரம்பரிய இசை விழாவாகும். டோவர் லேன் இசை மாநாடு என்பது உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் ஒரு இரவு முழுதும் நடைபெறும் இசை நிகழ்ச்சியாகும். இது பொதுவாக குரலிசை, சிதார், சரோத் மற்றும் வயலின் இசையை வழங்குகிறது.[1]

வரலாறு

[தொகு]

இந்த விழா, மறைந்த நரேந்திர சிங் சிங்கியின் ஆதரவின் பேரில், டோவர் லேனில் உள்ள அவரது இல்லமான சிங்கி பார்க்கில் முதலில் நடைபெற்றதால், இந்தப் பெயரைப் பெற்றது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Noone, Mathew (July 2013). "North Indian Classical Music and the Kolkata Experience". Ethnomusicology Ireland: 27. http://www.ictm.ie/wp-content/uploads/2013/08/ICTM-journal-Noone.pdf. பார்த்த நாள்: 4 November 2021.
  2. ↑ "Rhythm of Kolkata". The Hindu. 2002-02-10. Archived from the original on 2003-06-30. Retrieved 2013-01-25.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோவர்_லேன்_இசை_மாநாடு&oldid=4662101" இலிருந்து மீள்விக்கப்பட்டது