உள்ளடக்கத்துக்குச் செல்

கணிய நினைவக மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிய நினைவக மேலாண்மை (Memory management) என்பது கணினி ஒன்றின் நினைவக வளங்களைக் கட்டுப்படுத்தும், ஒருங்கிணைக்கும் செயல்முறையாகும்.[1] இது இயங்கும் பல்வேறு மென்பொருள் நிரல்களுக்குத் தேவையான நினைவகப் பகுதிகளை ஒதுக்குவதையும், அந்தப் பணிகள் முடிந்தவுடன், அவற்றை விடுவிப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டது ஆகும். ஒரு கணினியின் ஒட்டுமொத்தச் செயல்திறனை மேம்படுத்துவதில், இந்தச் செயல்முறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய கணினி அமைப்புகளில், நினைவக மேலாண்மையானது வன்பொருள், இயங்குதளம், பயன்பாட்டு மென்பொருள் ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.[2] இது இயங்குதளம் தன்னுள் உள்ள வரையறுக்கப்பட்ட நினைவகத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துகிறது என்பதைத் முடிவு செய்கிறது.

ஒதுக்கீட்டு முறைகள்

[தொகு]

மென்பொருள்களுக்கு நினைவகத்தை ஒதுக்குவதில் இரண்டு முக்கிய முறைகள் பின்பற்றப்படுகின்றன.

  • நிலையான ஒதுக்கீடு: ஒரு நிரல் இயங்கத் தொடங்கும் முன்பே, அதற்குத் தேவையான நினைவகம் நிரந்தரமாக ஒதுக்கப்படும். இது எளிமையானது என்றாலும் நினைவக வீணடிப்புக்கு வழிவகுக்கும்.
  • மாறும் ஒதுக்கீடு: நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே, அதன் தேவைக்கேற்ப நினைவகம் ஒதுக்கப்படும். தற்கால நிரலாக்க மொழிகளில் இந்த முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 'ஈயிப்' (Heap) எனப்படும் நினைவகப் பரப்பு பயன்படுத்தப்படுகிறது.

தரவுகளைச் சேமிக்கும் போது, அவை சிறிய துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு நினைவகத்தில் இடமளிக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில் சுட்டுமாறி (Pointer Variable) எனப்படும் தொழில்நுட்பம் மூலம், தரவுகள் இருக்கும் இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ What Is Memory Management? How It Works, Techniques, and Uses
  2. ↑ Silberschatz, Abraham (2018). Operating System Concepts. Wiley. p. 353. ISBN 978-1-119-45633-9.
  3. ↑ Knuth, Donald (1997). The Art of Computer Programming, Volume 1: Fundamental Algorithms. Addison-Wesley. p. 435. ISBN 978-0201896831.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிய_நினைவக_மேலாண்மை&oldid=4526024" இலிருந்து மீள்விக்கப்பட்டது