உள்ளடக்கத்துக்குச் செல்

எர்டா அலே மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்டா அலே
எர்டா அலே எரிமலை (எத்தியோப்பியா) உச்சி எரிமலைப் பெருவாய், 2009

எர்டா அலே மலைத்தொடர் (Erta Ale Range) என்பது எத்தியோப்பியாவின் அஃபார் பிரதேசத்தில் உள்ள அஃபார் முக்கோணப் பகுதியில் உள்ள மிக முக்கியமான எரிமலைச் சங்கிலித் தொடராகும். இது பெரும்பாலும் கேடய எரிமலைகளைக் கொண்டுள்ளது.

இந்த மலைத்தொடரின் ஒரு முக்கிய அம்சமாக செயல்நிலையில் உள்ள எரிமலையான எர்டா அலே உள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான எரிமலை அலே பாகு ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,031 மீ (3,383 அடி) உயரத்தில் உள்ளது. பெயரிடப்பட்ட பிற சிகரங்களில் (அவற்றின் உயரங்களுடன்) அலு (429 மீ (1,407 அடி)), டலாஃபில்லா (578 மீ (1,896 அடி)), போரலே அலே (668 மீ (2,192 அடி)) ஆகியவை அடங்கும்.[1] கடந்த 12,000 ஆண்டுகளுக்குள் முதல் முறையாக தெற்கு திசையில் உள்ள எய்லி குப்பி (493 மீ (1,617 அடி)) 2025 நவம்பர் 23 அன்று வெடித்ததாக அறிவியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எர்டா அலே

[தொகு]

எர்டா அலே எத்தியோப்பியாவின் மிகவும் செயல்நிலையில் உள்ள ஒரு எரிமலையாகும். அதன் மிக உயர்ந்த புள்ளி 613 மீ (2,011 அடி) உயரத்தை எட்டுகிறது. இது இப்பகுதியில் உள்ள பல கேடய எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது 50 கிமீ (31 மைல்) அகலமும் 1.6 கிலோமீட்டர் (1 மைல்) நீள்வட்ட உச்சிப் பகுதியையும் பல செங்குத்தான குழிகளையும் கொண்டுள்ளது. எப்போதும் செயல்நிலையில் உள்ள குழிகள் அவற்றின் எரிமலை ஏரிகளுக்கு பெயர் பெற்றவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Briggs, Philip; Blatt, Brian (2009). Ethiopia. Bradt Travel Guides. p. 314. ISBN 9781841622842.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்டா_அலே_மலைத்தொடர்&oldid=4413146" இலிருந்து மீள்விக்கப்பட்டது