எண்டெவர் விண்ணோடம்
| எண்டெவர் Endeavour | |
|---|---|
2008 இல் எண்டெவர் | |
| வகை | விண்ணூர்தி |
| வகுப்பு | விண்ணோட சுற்றுக்கலன் |
| தயாரிப்பாளர் | ரொக்வெல் இன்டர்நேசனல் |
| தொழினுட்பத் தகவல்கள் | |
| உலர் எடை | 78,000 கிகி (172,000 இறா.) |
| பறப்பு வரலாறு | |
| STS-49 மே 7–16, 1992 | |
| கடைசிப் பறப்பு | STS-134 மே 16 – சூன் 1, 2011 |
| பறப்புகள் | 25 |
| முடிவு | இளைப்பாறியது |
எண்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour, விண்ணோட சுற்றுக்கலன்: OV-105) என்பது நாசாவின் காலாவதியான ஒரு விண்ணோட சுற்றுக்கலன் ஆகும். இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது.[1][2][3] எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,[4] ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் அட்லாண்டிசு விண்ணோடம் இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.
1986 இல் விபத்தினால் அழிக்கப்பட்ட சாலஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு ஐக்கிய அமெரிக்கப் பேரவை ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், என்டர்பிரைசு விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் டிசுக்கவரி, அத்திலாந்திசு விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.
வரலாறு
[தொகு]1991 மே மாதம் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது 1992 மே மாதத்திலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
காப்டன் ஜேம்ஸ் குக் தனது முதல் பயணத்தில் (1768–1771) கொண்டு சென்ற பிரித்தானிய எண்டெவர் என்ற கப்பலின் பெயரால் இவ்விண்ணோடம் பெயரிடப்பட்டது.[5]
எஸ்.டி.எஸ்-130
[தொகு]அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Space Shuttle Overview: Endeavour (OV-105)". NASA. Archived from the original on பிப்ரவரி 22, 2020. Retrieved June 30, 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "STS-49". NASA KSC. Archived from the original on September 16, 2012. Retrieved June 30, 2011.
- ↑ "Endeavour completes final mission; NASA has one left". CNN. June 1, 2011 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 3, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181003205822/http://edition.cnn.com/2011/US/06/01/nasa.endeavour.lands/.
- ↑ "Consolidated Launch Manifest". NASA. Archived from the original on மார்ச் 7, 2009. Retrieved June 30, 2011.
- ↑ John F. Kennedy Space Center – Space Shuttle Endeavour பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம். Pao.ksc.nasa.gov. Retrieved on 2012-05-20.