உள்ளடக்கத்துக்குச் செல்

அனாதைப் படைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனாதைப் படைப்பு (orphan work) என்பது பதிப்புரிமைக்கு உட்பட்ட ஆனால் தளர்விலா முயற்சிக்குப் பின்பும் (after due diligence) பதிப்புரிமையாளர் யார் என்று அறியப்படாத அல்லது அறியப்பட்டாலும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு படைப்பு ஆகும். பதிப்புரிமையாளர் இறந்து அல்லது பதிப்புரிமைக்குச் சொந்தமான அமைப்பு இல்லாமல் போய், அடுத்து காப்புரிமை யாருக்கு உரித்தானது என்று நிறுவமுடியாமல் போனால் அந்தப் படைப்பு ஒரு அனாதைப் படைப்பு ஆகும்.[1][2][3]

பதிப்புரிமை பற்றி தெளிவற்ற நிலை, ஈழப் போராட்டம் காரணமாக நிகழ்ந்த பெரும் அழிவு போன்றவை தமிழ்ச் சூழலில் கணிசமான அளவு அனாதைப் படைப்புகள் இருக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Borgman, Christine L. (2007). Scholarship in the digital age: information, infrastructure, and the internet. MIT Press. p. 108. ISBN 978-0-262-02619-2.
  2. ↑ In from the Cold: An assessment of the scope of 'Orphan Works' and its impact on the delivery of services to the public (PDF). JISC Collections Trust. April 2009. p. 9. Archived from the original (PDF) on 2009-11-18. Retrieved 2020-07-06.
  3. ↑ National Writers Union (March 5, 2021). "NWU comments on discussion draft, Digital Copyright Act (DCA) of 2021" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனாதைப்_படைப்புகள்&oldid=3768602" இலிருந்து மீள்விக்கப்பட்டது