அணியக்கூடிய கருவி


அணியக்கூடிய கருவி அல்லது அணியக்கூடிய கணினி (Wearable computer) என்பது உடலில் ஆடை அணிகலன்கள் போல் உடுத்திக் கொள்ளத்தக்க கருவி அல்லது கள் ஆகும். இவ்வகைக் கணினிகள் ஒருவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், உடனுக்குடன் தேவைப்படும் தகவல்களை இணையவழிப் பெறவும், ஐம்புல உணர்வுகளை விரிவு படுத்தவும் என பற்பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் கருதுகிறார்கள். ஒருவருடைய புலன் உறுப்புகள் சூழலில் பதிந்து இருக்கும் பொழுது, தேவைப்படும் கூடிய கணிக்கும் திறன் உள்ள சூழ்நிலைகளின் இவ்வகை உடுப்புக் கணினிகள் பயன்படும் என நினைக்கின்றனர். பொதுவாக ஐம்புல உணர்வுகளை மேம்படுத்தும் (பல வழிகளின் வலுப்படுத்தும்) ஒரு கருவியாக உடுப்புக்கணிகள் கருதப்படுகின்றன.[1][2][3]
அணி கணினிகள் செயற்பாட்டுக்கும் நிறைய கணிக்கும் திறன் வேண்டும். பல்வேறு தரவுகளைப் பதியச் செய்யவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், புதிய தரவுகளை இணையவழிப் பெறவும், பிற இடங்களுக்குச் செலுத்தவும் பயன்படும். இந்த உடுப்புக் கணினிகளுக்குத் தேவையான மின்னாற்றலும் சூழிடங்களில் இருந்தே பெறப்படும். கூடவே எடுத்துச் செல்லும் மின்கலங்கள், சூழலில் உள்ள ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் ஒளி மின்கலங்கள் முதலிவற்றால் பெறப்படும்.
காண்க தொழில்நுட்ப அணி
எடுத்துக்காட்டுக்கள்
[தொகு]
- எடுத்துக்காட்டாக, மூக்குக் கண்ணாடிபோல் அணிந்திருக்கும் ஓர் அணிகணினி, தொலைவில் உள்ளதை மிக அருகில் உள்ளதுபோல காட்ட துணை செய்யும், தொலைவில் பேசுவதை அருகிலிருந்து கேட்பதுபோல் கேட்க உதவும்.
- மைன்ட்வேவ் நடமாடும் மூளைக் கட்டுப்பாட்டு இடைமுகம் - MindWave Mobile Brain Control Interface
- கூகிள் கண்ணாடி
- நுண் மணிக்கூடு
- Nymi Authentication Wristband
- Heapsylon Sensoria Smart Sock Fitness Tracker
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wearable Computing (in ஆங்கிலம்). Retrieved 2018-03-23.
{{cite book}}:|website=ignored (help) - ↑ Barfield, Woodrow (2015-07-29). Fundamentals of Wearable Computers and Augmented Reality, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4. ISBN 9781482243512.
- ↑ Mann, Steve (2012): Wearable Computing. In: Soegaard, Mads and Dam, Rikke Friis (eds.). "Encyclopedia of Human-Computer Interaction". Aarhus, Denmark: The Interaction-Design.org Foundation.
வெளி இணைப்புகள்
[தொகு]- Peer-reviewed encyclopedia chapter on Wearable Computing by Steve Mann (inventor)
- A brief history of wearable computing
- IEEE International Symposium on Wearable Computers (Academic Conference)
- Miller, Paul (26 June 2012). "Project Glass and the epic history of wearable computers". The Verge.