Please enable javascript.ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் : 15 ரூபாயில் புதிய 5G அன்லிமிடெட் டேட்டா திட்டம் : நிபந்தனைகள் -நன்மைகள் - reliance jio introduces 15 rupees 5g unlimited data pack conditions and benefits - - The Economic Times Tamil
+
கூகுள் செய்திகள் உடன் இணையுங்கள்The Economic Times Tamil

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் : 15 ரூபாயில் புதிய 5G அன்லிமிடெட் டேட்டா திட்டம் : நிபந்தனைகள் -நன்மைகள்

Authored by S.vinoth kumar The Economic Times Tamil • Updated: 5 Nov 2026, 6:49 am IST
The Economic Times Tamil

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக சூப்பர் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 15 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா பேக்கை ஜியோ அறிவித்துள்ளது. இந்த டேட்டா பிளானை பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்

ஜியோ ₹15 டேட்டா பூஸ்டர் விதிகள்
jio rs15 data plan
ஸ்மார்ட்போன் உலகில் மொபைல் டேட்டா என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள், ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா தேவை இருக்கின்றது. நாள் ஒன்றிற்கு 1 GB அல்லது 2 GB டேட்டாக்கள் சில நேரங்களில் போதாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிப்பதற்காக தான் ஜியோ தற்போது சூப்பர் பிளான் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது. ஒரு நாளில் குறிப்பிட்ட டேட்டா அளவு தீர்ந்துபோனால் அதிகமான விலை கொடுத்தே மீண்டும் ரீசார்ஜ் செய்யும் நிலை இருந்து வருகின்றது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் ரிலையன்ஸ் ஜியோ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக சூப்பர் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வெறும் 15 ரூபாயில் 5G டேட்டா பிளானை கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம். இந்த டேட்டா பிளான் என்பது 24 மணி நேரம் கொண்டது.ஜியோ ரூ15 டேட்டா பிளான்

ஒரே நாளில் அதிகளவில் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக இந்த டேட்டா பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது

15 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 24 மணி நேரம் வேலிடிட்டி கிடைக்கும். இந்த பூஸ்டர் ரீசார்ஜ் செய்த நேரத்தில் இருந்து சரியாக 24 மணி நேரம் வரை இது செயல்படும்

உங்களிடம் 5G மொபைல் இருந்து நீங்கள் 5G நெட்ஒர்க் ஏரியாவில் இருந்தால் எந்த ஒரு வேக கட்டுப்பாடும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்

ஒருவேளை உங்களிடம் 4G மொபைல் மட்டும் தான் இருக்கின்றது அல்லது உங்கள் ஏரியாவில் 4G நெட்ஒர்க் தான் உள்ளது என்றால் இந்த திட்டத்தில் 1GB அதிவேக 4G டேட்டா கிடைக்கும். அதன் பின் வேகம் என்பது 64 Kbps ஆக குறையும்

ரூ.15 டேட்டா பூஸ்டருக்கான நிபந்தனைகள்

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு ஜியோ வாடிக்கையாளர்கள் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

இந்த புதிய பிளான் என்பது டேட்டா Add-on பேக் தான். இதை தனியாக பயன்படுத்த முடியாது. உங்களுடைய மொபைல் எண்ணில் ஏற்கனவே ஒரு முதன்மை திட்டம் ஆக்டிவில் இருப்பது அவசியம்

அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவதற்கு உங்களிடம் 5G மொபைல் மற்றும் உங்களுடைய ஏரியாவில் 5G நெட்ஒர்க் இருக்க வேண்டும்

இது தினசரி இரவு 12 மணி டேட்டா வரம்பில் இருந்து தனித்து இயங்கும். நீங்கள் ரீசார்ஜ் செய்த நேரத்தில் இருந்து அடுத்த 24 மணி நேரம் வரை இந்த டேட்டா இயங்கும்

ரீசார்ஜ் செய்யும் முறை

MyJio App செயலுக்கு சென்று mobile பகுதிக்கு செல்லவும்

Recharge ஐ கிளிக் செய்து Data Booster / Add-on ஐ தேர்ந்தெடுக்கவும்

அந்த லிஸ்டில் இருக்கும் ₹15 Unlimited 5G / 1GB Data பேக்கை தேர்ந்தெடுக்கவும்

UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.15 செலுத்தவும்

ரீசார்ஜ் முடிந்தவுடன் 5G டேட்டா உடனடியாக செயல்பட துவங்கிவிடும்

S.vinoth kumar கட்டுரையாளரை பற்றி
S.vinoth kumar
S.vinoth kumar Digital Content Producer
தனிநபர் நிதிநிலை (Personal Finance) எழுதுவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட வினோத் குமார் அவர்களின் சுயவிவரக் குறிப்பு (Author Profile) கீழே கொடுக்கப்பட்டுள்ளது: வினோத் குமார் | சப்-எடிட்டர் & நிதிநிலை எழுத்தாளர் சுயவிவரக் குறிப்பு: ஊடகத் துறையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் வினோத் குமார், சிக்கலான தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிய முறையில் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். தற்போது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குழுமத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் சப்-எடிட்டராகப் பணியாற்றி வருகிறார். தனிநபர் நிதிநிலை (Personal Finance) நிபுணத்துவம்: வாசகர்களின் பொருளாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதையும், அவர்களின் நிதி மேலாண்மைத் திறனை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தனிநபர் நிதிநிலை சார்ந்த கட்டுரைகளை இவர் முதன்மையாக எழுதி வருகிறார். முதலீடு மற்றும் சேமிப்பு: மியூச்சுவல் ஃபண்டுகள், பிக்சட் டெபாசிட், தங்கம் மற்றும் எளிய பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டல்கள். பட்ஜெட் திட்டமிடல்: நடுத்தரக் குடும்பங்களுக்கான மாதப் பட்ஜெட் மேலாண்மை மற்றும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான நடைமுறை உத்திகள். அரசுத் திட்டங்கள் & வரிச் சேமிப்பு: சிறுசேமிப்புத் திட்டங்கள், காப்பீடுகள் மற்றும் வருமான வரிச் சலுகைகள் பற்றிய துல்லியமான கட்டுரைகள். ஊடகப் பின்னணி: முன்னதாக, மூன் டிவி மற்றும் புதியதலைமுறை ஆகிய முன்னணித் தொலைக்காட்சிகளில் 'புரோகிராம் புரொடியூசராக' (Program Producer) பணியாற்றியுள்ளார். காட்சி ஊடகத் துறையில் இவருக்கு இருக்கும் இந்த நீண்ட கால அனுபவம், வாசகர்களின் தேவையைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, நம்பகமான மற்றும் எளிமையான உள்ளடக்கத்தை உருவாக்க இவருக்குப் பெரிதும் உதவுகிறது. இதர நிபுணத்துவப் பிரிவுகள்: பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மை தவிர, வினோத் குமார் அவர்களுக்கு சினிமா (Cinema) மற்றும் விளையாட்டு (Sports) ஆகிய துறைகளிலும் ஆழ்ந்த ஆர்வமும் விரிவான அறிவும் உண்டு. இத்துறைகள் சார்ந்த சுவாரசியமான பகுப்பாய்வுகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வருகின்றார்.Read More

குறியீடு

No Data Available.

அடுத்த செய்தி

Newsசென்செக்ஸ், நிப்டி, ரூபாய்-டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, பங்கு சந்தை தொடர்பான அன்றாட அப்டேட்கள், IPO மற்றும் நிறுவனங்களின் முடிவுகள் பற்றிய ஒவ்வொரு நொடியும் தகவல்களை அறிய தொடர்ந்து படியுங்கள் — தி இகனாமிக் டைம்ஸ் தமிழ்Business Newsநாடு–உலகின் பொருளாதாரம், நிறுவனங்களின் முடிவுகள், தொழில் நுட்ப போக்குகள் மற்றும் வணிகத்துடன் தொடர்பான அனைத்து முக்கிய அப்டேட்களையும் இப்போது ஒரே இடத்தில் அறிந்து கொள்ளுங்கள்