மோர்கன் சுவாங்கிராய்
மோர்கன் சுவாங்கிராய் Morgan Tsvangirai | |
|---|---|
| சிம்பாப்வேயின் 2வது பிரதமர் | |
| பதவியில் 15 பெப்ரவரி 2009 – 11 செப்டம்பர் 2013 | |
| குடியரசுத் தலைவர் | ராபர்ட் முகாபே |
| முன்னையவர் | ராபர்ட் முகாபே (1987) |
| பின்னவர் | பதவி கலைக்கப்பட்டது |
| சனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் தலைவர் | |
| பதவியில் 30 செப்டம்பர் 1999 – 14 பெப்ரவரி 2018 | |
| முன்னையவர் | கிப்சன் சிபாண்டா |
| பின்னவர் | நெல்சன் சாமிசா |
| எதிர்க்க்கட்சித் தலைவர் | |
| பதவியில் 30 செப்டம்பர் 1999 – 14 பெப்ரவரி 2018 | |
| சிம்பாப்வே தொழிற்சங்கங்கப் பேரவை | |
| பதவியில் 10 மே 1987 – 30 செப்டம்பர் 1999 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மோர்கன் ரிச்சார்டு சுவாங்கிராய் 10 மார்ச்சு 1952 குட்டு, தெற்கு ரொடீசியா |
| இறப்பு | 14 பெப்ரவரி 2018 (அகவை 65) ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா |
| இறப்பிற்கான காரணம் | பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் |
| அரசியல் கட்சி | சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (Before 1987) ZANU-PF (1987–1999) சனநாயக மாற்ரத்திற்கான இயக்கம் |
| துணைவர்(கள்) | சூசன் முந்துவா (தி. 1978; இற. 2009) எலிசபெத் (தி. 2011) |
| பிள்ளைகள் | 7 |
| கையெழுத்து | |
| இணையத்தளம் | அரச இணையதளம் கட்சி இணையதளம் |
மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் (Morgan Richard Tsvangirai; மார்ச் 10, 1952 - பெப்ரவரி 14, 2018) என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது[1]. 2002 இல் இடம்பெற்ற அதிபார் தேர்தலில் ரொபேர்ட் முகாபேயுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற அதிபருக்கான முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் அதிகாரபூர்வ முடிவுகளின்படி அவரால் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நாட்டில் முகாபே ஆதரவாளர்களினால் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையைக் காரணம் காட்டி ஜூன் 27 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது என அவர் குற்றம் சாட்டினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Final House of Assembly Results". Zimbabwe Metro. Retrieved 2008-06-28.
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- MDC web site பரணிடப்பட்டது 2008-03-27 at the வந்தவழி இயந்திரம்