உள்ளடக்கத்துக்குச் செல்

மகேஷ் யோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகரிஷி மகேஷ் யோகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகரிசி மகேசு யோகி
Maharishi Mahesh Yogi
1978 இல் மகேசு யோகி
பிறப்பு12 சனவரி 191?[குறிப்பு 1]
இராசிம், மத்திய மாகாணம், பேரர், இந்தியா (இன்றைய சத்தீசுகர், இந்தியா)[1]
இறப்பு (அகவை 89–98)
வுலோதுரோப், இலிம்பர்க், நெதர்லாந்து
இயற்பெயர்மகேசு பிரசாத் வர்மா
சமயம்இந்து
நிறுவனர்
தத்துவம்ஆழ்நிலை தியானம்
குருபிரமானந்தா சரசுவதி

மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, 12 சனவரி 191?[குறிப்பு 1] - 5 பெப்ரவரி 2008), ஆழ்நிலைத் தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[7], மெக்சிக்கோ[8], ஐக்கிய இராச்சியம்[9], சீனா[10] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.[7]

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரசுவதி சுவாமிகளின் சீடராகி[11], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தைப் போதித்து வந்தார்.

மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[12]. 1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்குக் குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.

1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[13].

குறிப்புகள்

[தொகு]
  1. 1 2 மகரிசி மகேசு யோகியின் பிறந்த ஆண்டு உறுதிப்படுத்தப்படவில்லை, பல்வேறு மூலங்கள் 1911,[2] 1917,[3][4] அல்லது 1918[5][6] என்று கூறுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Koppel, Lily (6 February 2008). "Maharishi Mahesh Yogi, Spiritual Leader, Dies". The New York Times. https://www.nytimes.com/2008/02/06/world/asia/06maharishi-1.html?pagewanted=all&_r=0.
  2. ↑ Powell, James (13 March 2008). "His Holiness Maharishi Mahesh Yogi 1911*-2008". The Independent.
  3. ↑ Kroll, Una (1974) The Healing Potential of Transcendental Meditation, John Knox Press. Ch. 1: The Guru, pp 17–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804205986
  4. ↑ Jefferson, William (1976) The Story of The Maharishi, Pocket Books. pp 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671805265
  5. ↑ Ruthven, Malise (5 February 2008). "Maharishi Mahesh Yogi". The Guardian.
  6. ↑ Woo, Elaine (6 February 2008). "Guru brought meditation West". Los Angeles Times.
  7. 1 2 Gifts of the Global Country of World Peace
  8. ↑ "Rundschau". Archived from the original on 2008-05-01. Retrieved 2008-05-21.
  9. ↑ Maharishi School UK
  10. ↑ 1-888-LEARN TM (888-532-7686)
  11. ↑ http://www.srigurudev.net/srigurudev/gurudev/biography.html
  12. ↑ Oates, Robert M. Celebrating the Dawn, page 40. New York: G.P. Putnam's Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-399-11815-2.
  13. ↑ The New York Times

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மகேசு யோகி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_யோகி&oldid=4332656" இலிருந்து மீள்விக்கப்பட்டது