கடற்புலிகள்
| கடற்புலிகள் | |
|---|---|
| Sea Tigers | |
கடற்புலிகள் சின்னம் | |
| செயற் காலம் | 1984 - மே 18 2009 |
| நாடு | |
| கிளை | |
| வகை | அரசுசாரா கடற்படை[1][2] நீரடித் தகர்ப்பு |
| அளவு | 500 - 1,000 |
| குறிக்கோள்(கள்) | கடலிலே காவியம் படைப்போம் (ஆங்கிலத்தில்: Create History at Sea) |
| நிறம் | நீலம் மற்றும் வெள்ளை |
| ஆண்டு விழாக்கள் | ஏப்ரல் 10 (படையணித் தினம் ) |
| சண்டைகள் | இலங்கை உள்நாட்டு போர் |
| தளபதிகள் | |
| படையணியின் பேரரையர் | கேணல் சூசை[3] |
| குறிப்பிடத்தக்க தளபதிகள் | கேணல் சூசை †, கேணல் கங்கை அமரன்†, கேணல் செழியன் † |
கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்கினார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கியப் பங்கு வகித்தனர்.
கடற்புலிகள் வரலாறு
[தொகு]1984 ஆம் ஆண்டு , தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் , விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் படைப் பிரிவுக்கு அதன் வரலாற்றுரீதியான பிறப்பைக் கொடுத்து , ஆரம்பத்தில் அதற்க்கு ” கடற்புலிகள் ” எனப் பெயரும் சூட்டினார்.[4]
ஆரம்பத்தில் கடற்புலி அணியினருக்கு கடல் சம்பந்தமான அறிவு ஊட்டப்பட்டதுடன் , கடற் சண்டைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.[5]
ஆனால் கடற்புலி அணியினர் எதிரியிடம் வலிந்து சென்று கடற் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவித்தார்கள்.[6]
விடுதலைப் போராட்டத்தில் அந்தந்தக் காலங்களோடு ஒட்டிய தேவைகளை நிறைவு செய்யும் பல பணிகளை , அவர்கள் ஆற்றவேண்டியிருந்தது. கடற்பயணங்கள் போவதற்கும் அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்க்குமான வேலைகளையே ஆரம்பத்தில் கடற்புலி அணியினர் செய்து வந்தனர்.[7]
எனினும் சிறீலங்கா கடற்படையினரின் போர்ப் படகுகள் மீது , ஆங்காங்கே ஒருசில கடற்கண்ணித் தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளனர்.[8]
1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து 6 வருடங்களாகப் பெரிய அளவிலான கடற் சண்டைகள் எதிலுமே ஈடுபடாதிருந்த கடற்புலி அணியினர் , 1990 ஆம் ஆண்டு திரும்பவும் சிறீலங்கா இராணுவத்துடன் போர் ஆரம்பமாகிய போது , கடற் சண்டைகளில் ஈடுபடத் தொடங்கினர்.[9]
இக் கடற்போரிலும் கரும்புலித் தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு , கடற்போர் ஓர் புதிய பரிமாணத்திற்குள் சென்றது.[10]
இந்த வகையில் சிறீலங்காக் கடற்படை மீதான தனது முதலாவது பாரிய தாக்குதலை , 10.07.1990 அன்று வல்வைக்கடலில் வைத்துக் கடற் கரும்புலிகள் மேற்கொண்டனர்.[11]
வெடி மருந்து நிரப்பிய படகொன்றுடன் சென்ற கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன் , கப்டன் கொலின்ஸ் , கப்டன் வினோத் ஆகியோர் சிறீலங்கா கடற்படியின் ஒரு போர்க் கப்பலைச் தேதமாக்கி , இந்த வீரசாதனையைப் படைத்தார்கள்.[12]
இதே போன்று 04.05.1991 அன்றும் வாழ்வைக் கடலில் வைத்துக் கட்டளைக் கப்பலொன்று கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டது. இதுவும் ஒரு கரும்புலி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கப்டன் சிதம்பரம் , கப்டன் ஜெயந்தன் ஆகியோர் வீரச்சாவை அனைத்துக்கொண்டனர்.[13]
தமிழீழக் கடற்பரப்பில் சுதந்திரமாக உலாவந்த சிங்களக் கடற்படையினருக்கு இவ்விரண்டு கரும்புலி நடவடிக்கைகளும் பீதியைக் கொடுத்திருந்தன. அத்துடன் தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படை வைத்திருந்த கடல் ஏகபோகம் உடைந்து சிதறியது.[14]
தமிழ் மக்களாகிய நாம் ஒரு யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நிலங்களை விடுவிக்கும் அளவிற்கு முன்னேறியபோது , சிறீலங்கா அரசானது கடல் மூலமே தனது படைபலத்தைப் பிரயோகித்து , எமது முன்னேற்றத்தைத் தடுக்க முயன்று வருவதை , நாம் கண்டு வருகின்றோம். அதாவது , தரையுத்தத்தை வெல்ல எதிரி கடலையே பயன்படுத்தி வருகின்றான்.[15]
1987 ஆம் ஆண்டு வடமராட்சியைக் கைப்பற்ற ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” என்ற இராணுவ நடவடிக்கையைச் ச்ங்க்கலப் படைகள் நடாத்திய போதும் , 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாமை நாம் வெற்றிகொள்ள முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு சிலாவத்துறை முகாமை நாம் கைப்பற்ற முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரின்போது எம்மிடம் விழ்ட்சியடையும் நிலையில் இருந்த ஆனையிறவுத் தளத்தைப் பாதுகாக்கும் போதும். சிறீலங்கா அரசு கடல்வழி மூலமே தனது பலத்தைப் பிரயோகித்து எமது முயற்சிகளுக்குக் குறுக்கே நின்றது.[16]
இதற்குப் பிரதான காரணம் எமது கடலில் எதிரி வைத்திருந்த கடல் ஏகபோகம்தான்.

- ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்து வந்தது.
- 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
- 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
- மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[17]
தாக்குதல் முறை
[தொகு]பல கடற்கலங்களில் அணிகளாகச் சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.
படத் தொகுப்பு
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]கலைச்சொற்கள்
[தொகு]- ஓட்டிகள்
மேற்கோள்கள்
[தொகு]https://www.uyirpu.com/?p=10640
- ↑ Murphy, Martin N. (1 December 2012). "The abundant sea: prospects for maritime non-state violence in the Indian Ocean". Journal of the Indian Ocean Region 8 (2): 173–187. doi:10.1080/19480881.2012.730751. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-0881. https://doi.org/10.1080/19480881.2012.730751.
- ↑ "From the East India Company to Disney to the Cola Wars: A Brief Collection of Non-State Navies". USNI News (in அமெரிக்க ஆங்கிலம்). 30 April 2015. Retrieved 26 May 2020.
- ↑ "Colonel Soosai new LTTE chief?". India Today. https://www.indiatoday.in/headlines-today-top-stories/story/colonel-soosai-new-ltte-chief-47855-2009-05-17.
- ↑ "தமிழீழக் கடற்புலிகள்.!". Uyirpu (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-01. Retrieved 2026-10-03.

- ↑ Tamil rebels launch naval attack - (பிபிசி),Tigers attack Sri Lanka Navy installations in Delft - தமிழ்நெட்